அனிதாவின் புரட்சி....


புரட்சியை விதைத்திட தன் உடலில் இருந்து மரணித்து இன்று தமிழ் மக்களின் இதயத்தில் பூத்த புரட்சிப்பூ அனிதாவிற்காக...

இன்று கலைந்திருக்களாம் உன் கனவு,ஆனால் நாளை உன்னாலே ஓராயிரம் கனவுகள் நனவாகப்போகின்றது.

பதினேழு ஆண்டுகள் ஒரு கூலித்தோழிலாளி கண்ட கனவு,
தனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே ஒரு இலக்கை வகுத்துக்கொண்டு அதை அடைய அயராது உழைத்த ஒரு ஏழை மாணவி கண்ட கனவு,
காற்றிலே கரைந்து கலைந்து போனதே.

கடினமாக உழைத்தும் பயனின்றிப்போனதே என்று எண்ணி மாய்த்துக்கொண்டாயோ உன் உயிரை.
உண்மையாக உழைத்தும் உரிய இலக்கை அடையமுடியாமல் போனதை எண்ணி இந்த உலகைவிட்டே விடைபெற்றுக்கொண்டாயோ.

நீ மாண்டு போகவில்லை,
எங்கள் மனதை ஆண்டுகொண்டாய்.
நீ இந்த மண்ணில் மறைந்தாலும்
எங்கள் மனதில் மறையாமளே இருப்பாய்,
என்றும் மறக்கப்படாமளே இருப்பாய்.

உன்னால் பறித்து சுவைக்கமுடியாத கனியை உன்னைப்போன்றோர்களும் சுவைக்க வேண்டும் என்றே உன்னையே மாத்துக்கொண்டாயோ,
மாற்றம் வேண்டும் என்றே உன் உடலைவிட்டு உயிரை பிரித்து சென்றாயோ.
உன் உயிர் பிரிந்து சென்றாலும் உன் உடலை இந்த மண்ணிலே விதைத்துதானே சென்றிருக்கின்றாய்.
விதைத்துக்கொண்டே இரு
முலைத்தால் மரம் இல்லையேல்
இந்த மண்ணுக்கு உரம், என்று உன்னையே விதைத்தாயோ.
நீ புதைந்தாலும் மறைந்து போவதும் இல்லை,எங்களால் மறக்கப்பட்டுப்போவதும் இல்லை.
நீ விதையானாய்
உன்னாலே ஒரு விருச்சம் உருவாகும்,
அதன் கனிகளை நாளைய எதிர்காலம் சுவைக்கும்.
உன் சகோதர,சகோதரிகள் அதற்கான வழிகளை வகுப்பார்கள்.
உன்னை இழந்து நிற்கும் உன் குடும்பத்திற்கு உன்னாலே இன்று ஓராயிரம் உறவுகள் கிடைத்துவிட்டது.இருந்தாலும் உன் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது என்பது வருத்தமே.
இனியும் இன்னமும் ஒரு அனிதாவை இழக்க தயாராக இல்லை.

நம் தாய்தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ மட்டுமே...
இந்த சகோதரியின் விசயத்திலும் நாம் அவ்வாறு இருந்து விடக்கூடாது.
தன் உயிரால் எதேனும் நன்மை விளைய வேண்டும் என்று தன் உயிரைத்துரந்த சகோதரிக்காக நாம் எதாவது செய்ய வேண்டும்.
அவளை முன்நிறுத்தி அவளின் உயிரை குடித்த இந்த நீட் தேர்வு முறையையும்,அதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிக்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து எழுந்த இன்னமும் எழவிருக்கும் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றினைந்து,ஒன்றினைந்து என்றால் சாதி,மத வேறுபாடுகளைக்கடந்து,தயவுசெய்து இந்த விசயத்தில் சாதியை முன்நிறுத்துயோ,மதத்தை முன்நிறுத்தியோ எந்தஒரு தவறான முடிவையும் எடுக்காமல்  ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் எவ்வாறு வெற்றி கண்டதோ அதைபோன்று இந்த போராட்டத்தையும் வெற்றியடையச்செய்வோம்.

தன் சுயநலத்திற்காகவும்,தன் பொருப்பற்ற தன்மையாலும் தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகளை கலைத்து,இத்தனை நடந்த பிறகும் சிறிதும் குற்றவுணர்வின்றி  அறிவுகெட்டுப்போய் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் தங்களின் இயலாமையை ஒப்புக்கொண்டு தானாக மனமுவந்து பதவிவிலகினால் நன்று.அவ்வாறு விலகிச்செல்லக்குடியவர்கள் அல்ல அவர்கள் ஆகவே நாம் அவர்களை இறகுவதற்கான காரியத்தை முதலில் செய்ய வேண்டும்.

இன்றே விழித்துக்கொள்வோம் தமிழா...



Comments