Posts

Showing posts from 2017

அனிதாவின் புரட்சி....

Image
புரட்சியை விதைத்திட தன் உடலில் இருந்து மரணித்து இன்று தமிழ் மக்களின் இதயத்தில் பூத்த புரட்சிப்பூ அனிதாவிற்காக... இன்று கலைந்திருக்களாம் உன் கனவு,ஆனால் நாளை உன்னாலே ஓராயிரம் கனவுகள் நனவாகப்போகின்றது. பதினேழு ஆண்டுகள் ஒரு கூலித்தோழிலாளி கண்ட கனவு, தனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே ஒரு இலக்கை வகுத்துக்கொண்டு அதை அடைய அயராது உழைத்த ஒரு ஏழை மாணவி கண்ட கனவு, காற்றிலே கரைந்து கலைந்து போனதே. கடினமாக உழைத்தும் பயனின்றிப்போனதே என்று எண்ணி மாய்த்துக்கொண்டாயோ உன் உயிரை. உண்மையாக உழைத்தும் உரிய இலக்கை அடையமுடியாமல் போனதை எண்ணி இந்த உலகைவிட்டே விடைபெற்றுக்கொண்டாயோ. நீ மாண்டு போகவில்லை, எங்கள் மனதை ஆண்டுகொண்டாய். நீ இந்த மண்ணில் மறைந்தாலும் எங்கள் மனதில் மறையாமளே இருப்பாய், என்றும் மறக்கப்படாமளே இருப்பாய். உன்னால் பறித்து சுவைக்கமுடியாத கனியை உன்னைப்போன்றோர்களும் சுவைக்க வேண்டும் என்றே உன்னையே மாத்துக்கொண்டாயோ, மாற்றம் வேண்டும் என்றே உன் உடலைவிட்டு உயிரை பிரித்து சென்றாயோ. உன் உயிர் பிரிந்து சென்றாலும் உன் உடலை இந்த மண்ணிலே விதைத்துதானே சென்றிருக்கின்றாய். விதைத்துக்கொண்டே ...

அம்மா.....

Image
தொலைவில் உள்ள தொடமுடியாத வானம் கூட இன்று நான் தொடக்கூடிய ஒன்றாக மாறி என் தோல்களில் தூங்கிப்போனதே... உன்னுடைய அசுத்தமில்லாத அன்பின் அதிசயத்தில்... என்னால் தீண்டமுடியாத தென்றல் கூட இன்று என்னை தீண்டி என் தீராத சுவாசமாக மாறிப்போனதே... உன்னுடைய சூழ்ச்சியில்லாத சுவாசத் தீண்டலினால்... நெருங்கமுடியாத நெருப்புக்கோளமான சூரியன் கூட இன்று தன் கதிர்களை சுரிட்டிக்கொண்டு என்னுடைய கைகளில் தீபமாக மாறிப்போனதே... உன்னுடைய பரிவுள்ள பாசமான பார்வையினால்... நீல வண்ணத்தினால் இந்த பூமியை போர்த்திய நீல்கடல் கூட இன்று தன்னை சுரிக்கிக்கொண்டு என் இமைக்குள் மூழ்கிப்போனதே... உன்னுடைய இணையில்லாத இலகிய குணத்தினால்... அந்த நீல  நிறப்போர்வையை தாங்கிக்கிடக்கும் பொறுமையின் சிகரமாக விழங்கும் பூமித்தாய் கூட உன்னிடம் தோற்றுப்போகக்கூடிய அளவிற்கு பொறுமையில் உயர்ந்து நிற்கும் என்னை ஈன்ற தாயே... உன்னுடைய வயிற்றில் பிறந்ததாலே உலகின் அனைத்து இன்பங்களையும் எனக்கு கிடைக்கச்செய்தாயே... இன்று இவை அனைத்தையும் எனக்குகொடுத்துவிட்டு ஓரமாய் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது... அந்த ...

என்னை உணர்ந்தேன்...

Image
உன்னை கண்ட பின்னே,நான் என்னை உணர்ந்தேன் பெண்ணே, உன் நிழலை தீண்டத்தானே நான் மணலாய் மாறிப்போனேன். நீ என்னை சுவாசிக்கத்தானே காற்றாய் கரைந்தேன் நானே, உன் தேகம் தீண்டிச்சென்ற தென்றல்,என் சுவாசமாக மாற  தவங்கள் பலவும் செய்தேன். அந்த தவத்தின் பலனாய் தானே நானும் உயிர் கொண்டேன் பெண்ணே..

விழித்திடு தோழா...

Image
விழித்திடு தோழா இன்றே விழித்திடு விழிகளின் ஓரம் கண்ணீர் துடைத்திடு  நாளையா விடியும்  இன்றே முடியும்  உழைப்பு ஒன்றையே என்றும் நம்பிடு  உனக்குள் இருக்கும் உன்னை எழுப்பிடு எதிலும் உருதி கொண்டே உழைத்திடு  உன் செங்குருதியை இம்மண்ணிலே விதைத்திடு  அடிமை எனும் விழங்கை உடைத்திடு  அடங்காமல் புது புரட்சியை படைத்திடு  அனைவரும் சமம் எனும் கொள்கையை நிலைநிறுத்திடு  அதற்காகவேனும் உன் உயிரை கொடுத்திடு  உன் மறைவிலேனும் தோன்றட்டும் புது விடுயல்  அந்த விடியலிலே விழகுமோ அடிமை இருள்  அடிமை இருள் விழக விடுதலை வெயில் பரவ  புது மலராய் மலர்ந்திடுவாய் இவ்வுலகில்.

என்னுள்ளே நீயும் வந்தாயே....

Image
காலங்கள்   மெல்ல   மெல்ல   கரைகின்றது ,  என் - கனவுகளும் மெல்ல கலைகின்றதே, கலைகின்ற என் கனவுகளை கரை சேர்க்கவே வந்தாயே வந்தாயே என்னுள்ளே நீயும் வந்தாயே. என்   கண்களின்   கண்ணீரைத்   துடைத்திடவும் , என்   இதயத்தின்   வலிகளை   விரட்டிடவும் , விண்ணைத்தாண்டி   விண்மீன்களைத்   தீண்டி   என்னை   கரைசேர்க்கவே வந்தாயே   வந்தாயே என்னுள்ளே   நீயும்   வந்தாயே . உன்னில்   தொலைந்த   என்னை   மீட்டிடவே , என்   வாழ்வில்   உந்தன்   ஒளியை   ஏற்றிடவே , என்   நினைவில்   நின்று   நீங்காமல்   தினம்   தினம் வந்தாயே   வந்தாயே என்னுள்ளே   நீயும்   வந்தாயே . உன்   ஓரப்பார்வை   அதைக்   கண்ட   நோடியிலே , என்   உயிரின்   ஆழம்   சென்று   ஒளிந்தாயே , ஒளிந்த   உன்னை   தோண்டி   எடுக்கவே வந்தாயே   வந்தாயே என்னுள்ளே   நீயும்   வந்தாயே . எ...