அனிதாவின் புரட்சி....
புரட்சியை விதைத்திட தன் உடலில் இருந்து மரணித்து இன்று தமிழ் மக்களின் இதயத்தில் பூத்த புரட்சிப்பூ அனிதாவிற்காக... இன்று கலைந்திருக்களாம் உன் கனவு,ஆனால் நாளை உன்னாலே ஓராயிரம் கனவுகள் நனவாகப்போகின்றது. பதினேழு ஆண்டுகள் ஒரு கூலித்தோழிலாளி கண்ட கனவு, தனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே ஒரு இலக்கை வகுத்துக்கொண்டு அதை அடைய அயராது உழைத்த ஒரு ஏழை மாணவி கண்ட கனவு, காற்றிலே கரைந்து கலைந்து போனதே. கடினமாக உழைத்தும் பயனின்றிப்போனதே என்று எண்ணி மாய்த்துக்கொண்டாயோ உன் உயிரை. உண்மையாக உழைத்தும் உரிய இலக்கை அடையமுடியாமல் போனதை எண்ணி இந்த உலகைவிட்டே விடைபெற்றுக்கொண்டாயோ. நீ மாண்டு போகவில்லை, எங்கள் மனதை ஆண்டுகொண்டாய். நீ இந்த மண்ணில் மறைந்தாலும் எங்கள் மனதில் மறையாமளே இருப்பாய், என்றும் மறக்கப்படாமளே இருப்பாய். உன்னால் பறித்து சுவைக்கமுடியாத கனியை உன்னைப்போன்றோர்களும் சுவைக்க வேண்டும் என்றே உன்னையே மாத்துக்கொண்டாயோ, மாற்றம் வேண்டும் என்றே உன் உடலைவிட்டு உயிரை பிரித்து சென்றாயோ. உன் உயிர் பிரிந்து சென்றாலும் உன் உடலை இந்த மண்ணிலே விதைத்துதானே சென்றிருக்கின்றாய். விதைத்துக்கொண்டே ...